Choose your Web-Based Business Name Website in Namakkal Web designing company

வ.எண்பிற மொழிப்பெயர்கள்தமிழ்ப் பெயர்கள்
1டிரேடரஸ்  வணிக மையம்
2கார்ப்பரேஷன்   நிறுவனம்
3ஏஜென்சி   முகவாண்மை
4சென்டர்   மையம், நிலையம்
5எம்போரியம்   விற்பனையகம்
6ஸ்டோரஸ்  பண்டகசாலை
7ஷாப்   கடை, அங்காடி
8அண்கோ   குழுமம்
9ஷோரூம்   காட்சியகம், எழிலங்காடி
10ஜெனரல் ஸ்டோரஸ்  பல்பொருள் அங்காடி
11டிராவல் ஏஜென்சி   சுற்றுலா முகவாண்மையகம்
12டிராவலஸ்  போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13எலக்டிரிகலஸ்  மின்பொருள் பண்டகசாலை
14ரிப்பேரிங் சென்டர்   சீர்செய் நிலையம்
15ஒர்க் ஷாப்   பட்டறை, பணிமனை
16ஜூவல்லரஸ்  நகை மாளிகை, நகையகம்
17டிம்பரஸ்  மரக்கடை
18பிரிண்டரஸ்  அச்சகம்
19பவர் பிரிண்டரஸ்  மின் அச்சகம்
20ஆப்செட் பிரிண்டரஸ் மறுதோன்றி அச்சகம்
21லித்தோஸ்  வண்ண அச்சகம்
22கூல் டிரிங்கஸ்  குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23ஸ்வீட் ஸ்டால்   இனிப்பகம்
24காபி பார்   குளம்பிக் கடை
25ஹோட்டல்   உணவகம்
26டெய்லரஸ்  தையலகம்
27டெக்ஸ்டைலஸ்  துணியகம்
28ரெடிமேடஸ்  ஆயத்த ஆடையகம்
29சினிமா தியேட்டர்   திரையகம்
30வீடியோ சென்டர்   ஒளிநாடா மையம், விற்பனையகம்
31போட்டோ ஸ்டூடியோ   புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32சிட் பண்ட்   நிதியகம்
33பேங்க்   வைப்பகம்
34லாண்டரி   வெளுப்பகம்
35டிரை கிளீனரஸ்  உலர் வெளுப்பகம்
36அக்ரோ சென்டர்    வேளாண் நடுவம்
37அக்ரோ சர்வீஸ்  உழவுப் பணி
38ஏர்-கண்டிஷனர்   குளிர் பதனி, சீர்வளி
39ஆர்டஸ்  கலையகம், கலைக்கூடம்
40ஆஸ்பெஸ்டரஸ்  கல்நார்
41ஆடியோ சென்டர்   ஒலியகம், ஒலிநாடா மையம்
42ஆட்டோ   தானி
43ஆட்டோமொபைலஸ் தானியங்கிகள், தானியங்கியகம்
44ஆட்டோ சர்வீஸ்  தானிப் பணியகம்
45பேக்கரி   அடுமனை
46பேட்டரி சர்வீஸ்  மின்கலப் பணியகம்
47பசார்   கடைத்தெரு, அங்காடி
48பியூட்டி பார்லர்   அழகு நிலையம், எழில் புனையகம்
49பீடா ஸ்டால்   மடி வெற்றிலைக் கடை
50பெனிஃபிட் பண்ட்   நலநிதி
51போர்டிங் லாட்ஜத்ங் உண்டுறை விடுதி
52பாய்லர்   கொதிகலன்
53பில்டரஸ்  கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54கேபிள்   கம்பிவடம், வடம்
55கேபஸ்  வாடகை வண்டி
56கபே   அருந்தகம், உணவகம்
57கேன் ஒர்கஸ்  பிரம்புப் பணியகம்
58கேண்டீன்   சிற்றுண்டிச்சாலை
59சிமெண்ட்   பைஞ்சுதை
60கெமிக்கலஸ்  வேதிப்பொருட்கள்
61சிட்ஃபண்ட்   சீட்டு நிதி
62கிளப்   மன்றம், கழகம்,உணவகம், விடுதி 
63கிளினிக்   மருத்துவ விடுதி
64காபி ஹவுஸ்  குளம்பியகம்
65கலர் லேப்   வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66கம்பெனி   குழுமம், நிறுவனம்
67காம்ப்ளகஸ்  வளாகம்
68கம்ப்யூட்டர் சென்டர்   கணிப்பொறி நடுவம்
69காங்கிரீட் ஒர்கஸ்   திண்காரைப்பணி
70கார்ப்பரேஷன்   கூட்டு நிறுவனம்
71கூரியர்   துதஞ்சல்
72கட்பீஸ் சென்டர்   வெட்டுத் துணியகம்
73சைக்கிள்   மிதிவண்டி
74டிப்போ   கிடங்கு, பணிமனை
75டிரஸ்மேக்கர்   ஆடை ஆக்குநர்
76டிரை கிளீனரஸ்  உலர் சலவையகம்
77எலக்ட்ரிகலஸ்  மின்பொருளகம்
78எலக்ட்ரானிகஸ்  மின்னணுப் பொருளகம்
79எம்போரியம்   விற்பனையகம்
80எண்டர்பிரைசஸ்  முனைவகம்
81சைக்கிள் ஸ்டோரஸ்மிதிவண்டியகம்
82பேக்டரி   தொழிலகம்
83பேன்சி ஸ்டோர்   புதுமைப் பொருளகம்
84பாஸ்ட் புட்   விரை உணா
85பேகஸ்  தொலை எழுதி
86பைனானஸ்  நிதியகம்
87பர்னிச்சர் மார்ட்   அறைகலன் அங்காடி
88கார்மென்டஸ்  உடைவகை
89ஹேர் டிரஸ்ஸர்   முடி திருத்துபவர்
90ஹார்டு வேரஸ்  வன்சரக்கு, இரும்புக்கடை
91ஜூவல்லரி   நகை மாளிகை
92லித்தோ பிரஸ்  வண்ண அச்சகம்
93லாட்ஜ்   தங்குமனை, தங்கும் விடுதி
94மார்க்கெட்   சந்தை அங்காடி
95நர்சிங் ஹோம்   நலம் பேணகம்
96பேஜர்   விளிப்பான், அகவி
97பெயிண்டஸ்  வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98பேப்பர் ஸ்டோர்   தாள்வகைப் பொருளகம்
99பாஸ் போர்ட்   கடவுச்சீட்டு
100பார்சல் சர்வீஸ்  சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101பெட்ரோல்   கன்னெய், எரிநெய்
102பார்மசி   மருந்தகம்
103போட்டோ ஸ்டூடியோஒளிபட நிலையம்
104பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி   நெகிலி தொழிலகம்
105பிளம்பர்   குழாய்ப் பணியாளர்
106பிளைவுடஸ்  ஒட்டுப்பலகை
107பாலி கிளினிக்   பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108பவர்லும்   விசைத்தறி
109பவர் பிரஸ்  மின் அச்சகம்
110பிரஸ், பிரிண்டரஸ்  அச்சகம், அச்சுக்கலையகம்
111ரெஸ்டாரெண்ட்   தாவளம், உணவகம்
112ரப்பர்   தொய்வை
113சேல்ஸ் சென்டர்   விற்பனை நிலையம்
114ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்வணிக வளாகம்
115ஷோரூம்   காட்சிக்கூடம்
116சில்க் அவுஸ்  பட்டு மாளிகை
117சோடா பேக்டரி   வளிரூர்த்தொழில், காலகம்
118ஸ்டேஷனரி   மளிகை, எழுதுபொருள்
119சப்ளையரஸ்  வங்குநர்,
120ஸ்டேஷனரி   தோல் பதனீட்டகம்
121டிரேட்   வணிகம்
122டிரேடரஸ்  வணிகர்
123டிரேடிங் கார்ப்பரேஷன்வணிகக் கூட்டிணையம்
124டிராவலஸ்  பயண ஏற்பாட்டாளர்
125டீ ஸ்டால்   தேனீரகம்
126வீடியோ   வாரொளியம், காணொளி
127ஒர்க் ஷாப்   பட்டறை, பயிலரங்கு
128ஜெராகஸ்  படிபெருக்கி, நகலகம்
129எக்ஸ்ரே   ஊடுகதிர்